வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (16:53 IST)

உலக வரலாற்றிலேயே அதிக தொகை இதுதான்! – ஆயிரம் கோடிக்கு ஏலம் போன கார்!

Mercedes
உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது.

என்னதான் நவீன காலகட்டம், தொழில்நுட்பம் என்று காலகாலமாக வளர்ந்து வந்தாலும் பழைய பொருட்களுக்கு உள்ள மவுசே தனிதான். அதனால்தான் பழைய ஓவியங்கள், பொருட்கள், உபகரணங்கள் என பலவும் ஏலத்தில் பலரால் அதிகமான விலைக்கு வாங்கப்படுகிறது.

பழைய பொருட்களை சேகரிப்பது பலருக்கு பொழுதுபோக்காக உள்ளது. அப்படி ஒரு பொழுதுபோக்கிற்காக பழைய கார் ஒன்றை ரூ.1100 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஒருவர்.

கார் நிறுவனங்கள் பல இருந்தாலும் அவற்றில் மிகவும் பழமையான கம்பெனியாக இருக்கும் நிறுவனங்களில் மெர்சிடிஸும் ஒன்று. கனடாவை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் சமீபத்தில் தனது 1955ல் தயாரிக்கப்பட்ட விண்டேஜ் மாடல் காரை ஏலத்தில் விட்டுள்ளது.

இதை பிரிட்டனை சேர்ந்த கார் ஆர்வலர் சைமன் கித்ஸ்டான் என்பவர் இந்திய மதிப்பில் ரூ.1100 கோடிக்கு வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கார் இதுதானாம்.