Daily Horoscope
✕

15 ஆண்டுகளுக்கு பிறகு... பூமிக்கு மிக அருகில் செவ்வாய்!

Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (20:40 IST)
பூமியின் பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. இதில் செவ்வாய் கிரகம் முதலில் உள்ளது. இன்று செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது. 
26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும். அதன்படி இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர துவங்கியது. 
 
இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கிமீ தொலைவில் வருகின்றன. பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கிமீ தூரத்தில் சுழலும். எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கினாலும், டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கிமீ தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

இப்படி பண்ணாதீங்க!.. விஜய்க்கு தாடி பாலாஜி சொன்ன அட்வைஸ்!...

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை: கார்த்தி சிதம்பரம்...

தமிழ்நாட்டில் நவம்பர் 27 வரை மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

அன்பில் மகேஷ்க்கு 2 நாள் போலீஸ் காவல்.. சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி..

பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் விலகல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments