செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (21:25 IST)

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு ரூ.33 கோடி லாட்டரி பரிசு

Dubai
ஐக்கிய அரபு அமீரகத்தில், தனது குழந்தைகளின் பிறந்த  நாள் தேதியான 7 மற்றும் 13 எண்காளில் வாங்கிய இந்தியர்  ஒருவரின் லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் எய்ன் பகுதியில் வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த ராஜிவ் அரிக்காட் என்பவர் தனது குழந்தைகளின் பிறந்த  நாள் தேதியான 7 மற்றும் 13 எண்காளில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜிவ் அரிக்காட் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
தன் நண்பர்கள் 19 பேருக்கு இந்த தொகையில் ஒரு பகுதியைக் கொடுத்து  இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.