செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2016 (18:24 IST)

புலிகள் மீண்டும் தமிழ் ஈழத்திற்காக போர் தொடுக்கும்! - கோத்தபய ராஜபக்சே கலக்கம்

புலிகள் மீண்டும் தமிழ் ஈழத்திற்காக போர் தொடுக்கும் வாய்ப்புள்ளது என்ற வகையில் முன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய கோத்தபய ராஜபக்சே, ”பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை தொடர்பாக நடத்திய சோதனையில் இது தெரியவந்துள்ளது.
 
பிரபாகரன் இல்லாமல் போனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவினாலும், எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்பற்றப்படும் என புலி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்” என்பதையும் ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மேலும், கொழும்பில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மொரிஸ் மற்றும் கிரி என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை தற்போதைய அரசாங்கம் விடுதலை செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.
 
இவர்களை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் எவ்வளவு சிரமப்பட்டனர் என்பது புதிய அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியாது. போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சுமார் 30,000 படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளதுடன், 50,000 படையினர் உடல் ஊனமுற்றுள்ளனர்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.