புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (18:11 IST)

கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலமா? சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

Kothapaya
இலங்கையில் நடக்கும் பொது மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருக்கிறார் என்ற தகவல் வெளியானது
 
ஆனால் மாலத்தீவில் உள்ள மக்கள் அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் செய்ததன் காரணமாக தற்போது அவர் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்தபோது கோத்தபாய ராஜபக்சவிற்கு சிங்கப்பூர் அடைக்கலம் தரவில்லை என்றும் தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூர் வந்துள்ளார் என்றும் அவரும் சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கோரவில்லை என்றும் கூறியுள்ளது
 
மேலும் சிங்கப்பூரில் இருந்து அவர் விரைவில் வேறு நாடுக்கு சென்று விடுவார் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது