புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (11:32 IST)

வீதி பாடகரின் கிதாருக்கு மயங்கிய பூனை குட்டிகள்.. வைரல் வீடியோ

வீதியில் கிதாருடன் பாடும் பாடகரின் இசையை, 4 பூனைக்குட்டிகள் ஆடியன்ஸாக அமர்ந்து ரசித்த காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில், வீதி பாடகர் ஒருவர் தினந்தோறும் வீதியில் செல்லும் மக்களின் மத்தியில் கையில் கிதாருடன் பாடி வருகிறார். சிறந்த பாடகராக இருந்தாலும் இந்த வீதி பாடகருக்கு மக்களிடம் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இரவு நேரத்தில் ஒரு சந்தை பகுதியில் அமர்ந்து கிதாரை எடுத்து ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடலை நான்கு குட்டி பூனைகள் அவருக்கு முன் அமர்ந்து ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த சாலையில் செல்வோரை வியப்பில் ஆழ்த்தியது.

அவர் கிதாரை இசைத்து ஒரு பாடலை பாட, அதனை நான்கு பூனைகள் அமர்ந்து ரசித்து கேட்பதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவ்வாறு பூனை குட்டிகள் இசையை ரசித்து கேட்பதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.