1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (11:25 IST)

கடத்தி கொலை செய்த வழக்கு - 520 ஆண்டுகள் சிறை தண்டனை

கடத்தி கொலை செய்த வழக்கு - 520 ஆண்டுகள் சிறை தண்டனை

மெக்சிகோ நாட்டில் 13 பேரை கடத்திய வழக்கில் 520 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது நீதிமன்றம்.


 
கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம், மெக்சிகோ சிட்டியில் உள்ள மதுமானக் குடிப்பகத்திலிருந்து 13 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்தனர். போதைப்பொருள் விநியோகஸ்தர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 8 பேருக்கு ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மதுபான குடிப்பக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 500 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 2 பேருக்கு டிசம்பர் மாதம் 520 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடை மேலும் 2 பேருக்கு தலா 520 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு, 2.7 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.