1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (14:20 IST)

நான் அழகா இல்லையா? பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவரை இணையதளத்தில் அழகாக இல்லை, குண்டாக உள்ளார் என்று கிண்டல் செய்துள்ளார். இதில் மனமுடைந்த பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.


 


 
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பிராண்டிவெலா என்ற மாணவியை இணையதளத்தில் அழகாக இல்லை, குண்டாக உள்ளார், அசிங்கமாக இருக்கிறார் என்று சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
 
இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதில் மனமுடைந்த பள்ளி மாணவி இதுகுறித்து தனது தங்கையிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர்கள் அந்த பள்ளி மாணவியின் அறைக்கு சென்றனர். அங்கு அவர் தற்கொலை செய்துக்கொள்ள துப்பாக்கியுடன் தயார் நிலையில் இருந்தனர்.
 
பெற்றோர்கள் எவ்வளவு கூறியும் அவர் கேட்கவில்லை. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.