அமெரிக்க சேவை மையத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் சமூக சேவைகள் செய்யப்பட உள்ளன. இந்த மையத்தை அமெரிக்க எம்.பி.க்கள் இல்லினாய்சை சேர்ந்த டேன்னி கே. டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். தொடக்க விழாவின் போது ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.