1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (09:36 IST)

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு; மரணம் என தகவல்!

வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாரா நகரில் உரையாற்றிய போது ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் அளித்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.