ஹமாஸ் கிளர்ச்சிக்குழுவால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதி விடுதலையாகும்போது அவர்களை முத்தமிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளது. அதன்படி ஹமாஸ் குழுவினர் தாங்கள் பிடித்துச் சென்ற இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது ஒமர் ஷெம் தோவ் என்பவரும் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் தங்களை பிடித்து வைத்திருந்த ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு முத்தம் கொடுத்து விடைபெற்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் ஷெம் தோவிடம் அவர் ஏன் அப்படி செய்தார் என கேட்டபோது அவ்வாறு செய்யுமாறு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். அதை பார்க்க பிரியாவிடை பெறுவது போல தெரிவதன் மூலம் தாங்கள் பிணைக்கைதிகளை நட்புறவாக நடத்தியதான தோற்றத்தை உருவாக்க ஹமாஸ் குழுவினர் முயன்றது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.
Edit by Prasanth.K