ரஷ்ய அதிகாரியின் தலை துண்டிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் அராஜகம்!
ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் மற்றும் அங்கு அதிரடி தாக்குதல்களின் மூலம் பலரை கொன்று குவித்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருகிறது.
இதனால், ரஷியாவை முக்கிய எதிரியாக கருதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷியாவை சேர்ந்த விமானப்படை வீரர்களையும், உயரதிகாரிகளையும் பிணையக்கைதியாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த மேலும் ஒரு விமானப்படை அதிகாரியின் தலையை துண்டித்து கொன்ற வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.