1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (15:34 IST)

கடலில் மூழ்கும் நகரங்கள்: 32 ஆண்டுகளே கெடு!

பருவ நிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகின்றன. இதன் விளைவாக கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு கடல் நீரில் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக இந்தோனேசியாவின் ஐகார்த்தா நகரத்தில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் ஜாவா தீவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மீது 13 ஆறுகள் ஓடுகின்றன. கடல் நீரின் மட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 
 
இந்நிலையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு 1 செமீ முதல் 1.5 செமீ வரை கடலில் மூழ்கி வருகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த நகரத்தின் பாதி அளவு கடல் மட்டத்துக்கு கீழே சென்று விட்டது.
 
மேலும், மேற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 15 செ.மீட்டரும், கிழக்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 10 செ.மீட்டரும், மத்திய ஜகார்த்தா ஆண்டுக்கு 2 செ.மீட்டரும், தெற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 1 செ.மீட்டர் அளவும் கடலில் மூழ்கி வருகிறது. 
 
இதே நிலை நீடித்தால் ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி 2050 ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் என தெரிகிறது.