திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (12:01 IST)

கழுத்தை சுற்றிய மஞ்சள் மலைப்பாம்பு; மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்று கழுத்தை இறுக்கியப்படி மரணித்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பாம்புகளுடன் மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் வளர்த்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த வாரம் லாராவின் வீடு பூட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயடுத்து போலீஸார் வீட்டின் உள்நுழைந்து பார்த்த போது  மஞ்சள் நிற மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் லாரா இறந்து கிடந்தார்.
 
லாராவின் மரணம் சந்தேகத்திற்குரிய மரணமாக போலீஸாரால் பார்க்கப்படுகிறது. லாரா போதையில் மயங்கி விழுந்ததும், பாம்பு அவரின் கழுத்தை இறுக்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.