திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (23:33 IST)

நாசா விண்வெளி மையத்தில் இந்திய வம்சாளி பெண் நியமனம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏசி சரனியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகில் முன்னணி விண்வெளி நிறுவனமான நாசா பல புதிய கண்டுபிடிப்புகளையும்,தகவல்களையும் உலகிற்கு தெரியப்படுத்தி வருகிறது.

இந்த  நிறுவனத்தில் பணியாற்ற உலகெங்கிலும் உள்ள திறமையானவர்கள் போட்டியிடுவர்.

அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற்னர்.

தற்போது இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளித்துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டனின் உள்ள நாசா தலைமமையகத்தில் நாசாவின் தொழில் நுட்பக் கொள்கை நிர்வாகி நெல்சனின்  முதன்மைச்  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்