விஷ எறும்பு கடித்து பெண் பலி
சவுதி அரேபியா நாட்டில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் விஷ ஏறும்பு கடித்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் அடூர் பகுதியை சேர்ந்த சூசி ஜெப்பி என்ற பெண், தனது குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை ஏதோ ஒரு விஷ தன்னம் வாய்ந்த எறும்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதானால் அவரது குடும்பத்தினர் சூசி ஜெப்பியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்களும் அவரை பரிசோதித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இது குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.