புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (17:02 IST)

”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், இதனை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டிவிட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஃபோட்டோவை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.