வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:52 IST)

தொடரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; பற்றி எரியும் சவுதி விமானம்!

ஏமன் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையத்தை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏமன் அரசு சவுதி அரேபியாவின் ராணுவமும் உதவி புரிவதால் கிளர்ச்சியாளர்கள் அவ்வபோது சவுதியையும் தாக்கி வருகின்றனர். இதனால் சவுதி – ஏமன் எல்லைப்பகுதியில் உள்ள நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை சவுதி எல்லையில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கிருந்த விமானம் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.