புயலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டம்: அமெரிக்காவில் தடை உத்தரவு
அமெரிக்காவில் சமீபத்தில் ஹார்வே புயல் டெக்ஸாஸ் மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களை சிதறடித்துவிட்டது. புயல் காரணமாக பெய்த கனமழையால் வீடு மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றுவிட்டனர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதாக புகார்கள் குவிந்துள்ளது. புயல் காரணமாக வீட்டை பூட்டி பொதுமக்கள் சென்றுள்ளதால் கொள்ளையர்களுக்கு செளகரியமாக உள்ளதாகவும், இந்த புயலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் புகார்கள் குவிந்தன
இந்த நிலையில் ஹுஸ்டன் நகரில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் 5 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.