அதிசயம் ஆனால் உண்மை!
பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகையில் 1.6 சதவீதம் இந்துக்கள் இருகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், அவர்களுக்கு என தனியாக திருமண பதிவு சட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இதனால், அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபை இந்து திருமண மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் இந்து தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும்.
இதன்மூலம் இந்து பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு சிறப்பான தருணமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.