ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheeesh
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (18:54 IST)

ஆடு 360: கூகுளின் அடுத்த முயற்சி

ஸ்ட்ரீட் வியூ என்று அழைக்கக்கூடிய கூகுள் மேப்புக்காக 360 டிகிரி புகைப்படங்களை எடுக்க ஆடுகளை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. அதற்கான சோதனை முயற்சிலும் இறங்கிவிட்டது.


கூகுள் மேப்ஸில் உள்ள ஸ்ட்ரீட் வியூ மூலம் நகரங்களின் தெருக்களில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் பிரபலமான நகரங்களை தவீர மற்ற இடங்களில் எல்லாம் இந்த ஸ்ட்ரீட் வியூ வசதி இல்லை.

ஆகையால் அழகான மலைப்பகுதிகள், இயற்கை அமைப்பு கொண்ட சுற்றுலா தளங்கள் போன்ற இடங்களில் ஸ்ட்ரீட் வியூ வசதி ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

அதனால் செம்மறி ஆடு மூலம் புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளது. செம்மறி ஆடு மேல் சோலார் பயன்படுத்தி 360 டிகிரி கேமரா பொருத்தி புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.