வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (13:44 IST)

அடுத்தாண்டு இந்த நாட்டில்தான் ஜி20 மாநாடு!

modi-silva
டெல்லியில்    ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட  பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

நேற்று தலை நகர் டெல்லியில் தொடங்கிய ஜி 20  மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த உலகத் தலைவர்கள் இன்று காலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்தனர்.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

இந்த நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்கிறது. இதற்காக பொறுப்பை இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.  அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகவுள்ளது.

எனவே  அடுத்த வருடம் ரியோ டி ஜெனியோவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும்படி இஉலகத் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.