தமிழகத்தின் பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம்: அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை
தமிழக முழுவதில் உள்ள பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம் வைக்க வேண்டும் என்று கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது
இதனை அடுத்து விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva