புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (16:24 IST)

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, மருத்துவமனையில் அனுமதி

Mahathir Mohamad
மலேசிய முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது( 98). இவர்  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, முதுமையால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள் மற்றும்  நோய்த்தொற்றால் சில ஆண்டுகளாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு இதய நோய் அதிகரித்ததைத் தொடர்ந்து, பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி தொடர்பான விசாரணையில் மகாதீரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால், வரும் ஜூலை 19 ஆம் தேதி இவ்வழக்கின்  விசாரணையை தொடர்வதாக நீதிபதி கூறினார்.