புளோரிடாவை புரட்டி எடுத்த மில்டன் புயல்..10 பேர் பரிதாப பலி..!

Written By Siva
Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:37 IST)
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் புயல் புரட்டி எடுத்ததை  அடுத்து இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று அதிகாலை புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் கரையை கடந்த நிலையில் புயல் பாதிப்புகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமான காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புளோரிடா மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் எதிர்பார்த்த அளவுக்கு அதி தீவிர புயலாக மில்டன் கரையை கடந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இருப்பினும் ஏராளமான வீடுகள் சாலைகள் சேதம் அடைந்திருப்பதாகவும் மரங்கள் சாலைகளில் வேரோடு விழுந்திருப்பதாகவும் மீட்பு பணியை முடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments