வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (14:59 IST)

விண்வெளியில் முதல் குற்றம் : நாசா விசாரணை ..பரப்பரப்பு தகவல்..

சர்வதேச விண்வெளி மையத்திலுருந்த விண்வெளி வீரர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் வங்கிக் கணக்கை இயக்கியதாக புகார் எழுந்துள்ளடு. இந்நிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி வருதாக செய்திகள் வெளியாகின்றன.
தன்பாலின ஈர்ப்பாலர்களான அமெரிக்க விமானப் படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் மற்றும் மெக்லைன் ஆகிய இருவரும், கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
 
அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் அமெரிக்க மத்திய வர்த்தக் ஆணையத்திடம் சம்மர் வொர்டன் அளித்த புகாரில்: மெக்லைன் விண்வெளியில் இருந்து தனது வங்கிக்கணக்கை இயக்கியதாகப் புகார் அளித்துள்ளார்.
 
விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய மெக்லைன், தான் விண்ணில் இருந்தபடியே வங்கிக் கணக்கை இயக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும் , சம்மர் வோர்டம் மற்றும் தனது மகனின் நிதி நிலவரம் எப்படி உள்ளது என்பதை பார்ப்பதேன் என விளக்கம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம்  குறித்து போலீஸார் நாசா அதிகாரிகள் இருவரிடமும் விசாரித்து வருவதாக தகவல்கள்  வெளியாகிறது.