உலகளவில் ரஷ்யா மீதான கண்ணோட்டத்தை மாற்றிய கால்பந்து போட்டி: பிபா தலைவர்
ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக பிபா தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷ்யா உள்ளானது.
தற்போது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திவரும் பிபா அமைப்பின் தலைவர் கியானி இன்பான்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் கியானி இன்பான்ட்டினோ, ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளது என்று கூறினார்.