Daily Horoscope
✕

பொம்மை வெடித்து 3 சிறுவர்கள் பலி - தீவிரவாதிகள் தாக்குதலா?

Updated: வியாழன், 6 நவம்பர் 2014 (16:57 IST)
பஞ்சாப் மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
வாஹா எல்லைப்பகுதியில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதில் அப்பாவி சிறுவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
லாகூரை அடுத்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரோவல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சிறுவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அதில் ஒரு பொம்மை வெடித்து சிதறியதில் 3 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது பொம்மை இல்லை என்றும், சிறிய ரக பீரங்கி வெடிகுண்டாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுகுறித்து பஞ்சாப் மாகாண அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தவெக அரசின் அப்பட்டமான தோல்வி - முக ஸ்டாலின் காட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மோசமானது.. திமுகவை விமர்சித்த திருமாவளவன்...

பாஜகவின் தொகுதி மறுவரைறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு..

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி!.. சவரனுக்கு ரூ.400 குறைந்தது!

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?.. திமுகவுக்கு தவெக பகிரங்க சவால்!

Show comments