156 பெண்களை பலாத்காரம் செய்த டாக்டருக்கு 175 வருடங்கள் சிறைத்தண்டனை
முன்னாள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் டாக்டர் ஒருவருக்கு பாலியல் குற்றத்திற்காக 175 வருடங்கள் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் டாக்டர் லாரி நாசர். 40 வயதான இவர் தன்னிடம் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற வந்த பெண் வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது 156 பெண்கள் புகார் செய்தனர். இவர்களில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற இரு வீராங்கனைகளும் அடங்குவர்
இந்த நிலையில் இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு 175 வருடங்கள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு இவருக்கு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.