திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:47 IST)

கொரோனா தடுப்பூசி போடும் முதல் நாடு; ரிசல்ட்டுக்காக இந்தியா வெயிட்டிங்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக மக்களுக்கு இங்கிலாந்து அளிக்க உள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 5 நிறுவனங்களி தடுப்பூசிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனாவை கட்டுப்படுத்தும் திறனை பெற்றுள்ளன.

எனினும் பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு நேரடியாக கொரோனா தடுப்பூசி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் பைஸர் தடுப்பூசியை நேரடியாக மக்களுக்கு அளிக்க உள்ளனர். அமெரிக்காவின் கண்டுபிடிப்பான பைஸர் தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் இந்த பரிசோதனையை உலக நாடுகள் கவனித்து வரும் நிலையில் பைஸர் உட்பட்ட 5 தடுப்பூசிகளில் எது நல்ல பலன் தருகிறதோ அதை கொள்முதல் செய்ய இந்தியாவும் காத்திருப்பு பட்டியலில் உள்ளது.