செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (20:27 IST)

இலங்கையில் அவரசநிலை வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு-!

இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் சமீபத்தில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதில், அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.  அதன்பின், அதிபர் கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பினார்.

இவர்களுக்கு எதிராகப் போராட்டிய மக்கள் ஆட்சியாளர்களின்  மாளிகைகளுக்கு தீ வைத்தனர்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே முறைப்படி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மக்கள் கொழும்பில், அதிபர் மாளிகை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், அமலில் உள்ள அவரச நிலை வரும் ஆகஸ் 14 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.