செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (08:09 IST)

பின்லாந்தில் கொரோனா அவசரநிலை பிரகடனம்: மிக வேகமாக பரவும் கொரோனா!

பின்லாந்தில் கொரோனா அவசரநிலை பிரகடனம்
பின்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதை அடுத்து அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பின்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் நாட்டில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது 
 
மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நாடாளுமன்றம் உள்பட அனைத்து இடங்களும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் பின்லாந்து அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது 
 
பின்லாந்து நாட்டில் மீண்டும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் சுகாதாரத் துறையும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் ஒரு அதிரடி முடிவுதான் இந்த அவசர நிலை பிரகடனம் என்றும் கூறப்படுகிறது