செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:27 IST)

மறுபடி லோகோவை மாத்த போறேன்..! ஆட்டம் போடும் எலான் மஸ்க்! – கடுப்பில் ட்விட்டர் பயனாளர்கள்!

Elon mUsk
ட்விட்டரை வாங்கியது முதல் தொல்லை மேல் தொல்லை செய்து வரும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.



உலகம் முழுவதும் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் ட்விட்டர். இதை சமீபத்தில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதுமுதல் ட்விட்டர் பயனாளர்களுக்கு சதா இம்சை தந்து வருகிறார். அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் வெரிபிகேசனை ப்ளூ, க்ரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் வசூலிக்க ஆரம்பித்தார், ட்விட்டர் பணியாளர்கள் பலரை வேலை விட்டு நீக்கினார்.

பின்னர் தற்போது ட்விட்டர் பயனாளர்கள் எத்தனை ட்வீட்டை பார்க்க முடியும் என்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார், இந்நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டரின் லோகோவை மாற்ற உள்ளதாகவும், பறவைகளுக்கு விடுதலை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில காலம் முன்னதாக ட்விட்டர் பறவை லோகோவை மாற்றி அதற்கு பதிலாஜ டாட்ஜின் (Dodge) லோகோவை எலான் மஸ்க் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கின் இம்சைகள் தாங்காமல் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K