வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (23:22 IST)

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று நிலநடுக்கம் ...மக்கள் பீதி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டது. இதில்,  50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இன்னும் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து, இந்தோனேஷியா, தைவான், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம், நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில்,   பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது, ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. மிண்டனாவ் தீவில் உள்ள மலைப்பகுதியில், உள்ள சில கிமீ தூரம் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ஆழமற்றதாக இருந்தாலும் அதிகம் பாதிக்கும்! எனவே அதிகாரிகள் விரைவில் இதுபற்றி  அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படுவர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6  ரிக்டர் ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.