இந்த வகையாக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகளை விமானநிலையங்கள், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் சிறைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதர்களை விட 4 மடங்கு கூர்மையான பார்வை திறன் கொண்ட கழுகுகளால் நீரின் ஆழத்தில் உள்ள மீனை 1.6 கி.மீ. தூரத்தில் இருந்தே கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக அமெரிக்கன் பால்ட் கிளாட் வகைக் கழுகுகளைத் தேர்ந்தெடுத்துள்ள டச்சு காவல்துறையினர், அதன் கால்களில் 6 செ.மீ. நீளமுள்ள இரு கத்திகளையும் தாக்குதலுக்காகப் பொருத்தியுள்ளனர். மேலும், பயிற்சியின்போது கழுகுகள் 80 சதவீத அளவுக்கு தங்கள் பணியைச் சரியாகச் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.