1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (08:44 IST)

கொரோனா ஒரு வரம்... ட்ரம்ப் சர்ச்சை ட்விட்!!

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என ட்ரம்ப் ட்விட். 

 
அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா குணமானதாக ட்ரம்ப் மற்றும் மெலனியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.
 
பிறகு கொரோனா குறித்து பேசிய ட்ரம்ப், கொரோனா கொடியது என்று மக்கள் பயப்பட தேவையில்லை. அது சீசனுக்கு வரும் காய்ச்சல் போன்றதுதான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் போட்டுள்ள ட்விட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை இது கற்றுக் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும்.