புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (15:52 IST)

சிறுவனின் தலையை கடித்துக் குதறிய நாய் ! நாய் இருந்தால் ஜாக்கிரதை..

பிரான்ஸ் நாட்டில் வால் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் 9பது வயது சிறுவனை, உயர் ரக  நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு சிறுவன் தன் தாயுடன்  வாவ் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான். 
 
அப்போது, அங்கிருந்த ஒரு உயர் ரக நாய் ஒன்று, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கீழே தள்ளிக் கடித்துள்ளது. இதனைப் பார்த்த அவனது தாய் பதறியடித்து கூச்சல் போட அவரையும் கடித்துள்ளது நாய். பின்னர்  அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுவனையும், அவனது தாயாரையும்  மீட்டு மருத்துவமனையில் சேர்கப்பட்டு தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
சிறுவன் மற்றும் அவனது தாயை கடித்த நாய், ரோட்வீலர் ரக இனத்தைச் சேர்ந்தது என்று தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் ,குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நாய்க்கு உரிமையாளர் யாருமே இல்லை என்பதுதான். இந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.