திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (17:13 IST)

மனைவியுடன் தகராறு... 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையைத் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோசந்திரகிர் லோதி. இவர் கடந்த புதன்கிழமை அன்று குடிபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் தன் 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டிக் கொன்றார்.

அதன்பின்னர், இறந்த தன் மகனின் உடலை ஒரு விவசாய வயதில்   புதைத்துள்ளார்.

உடனே, அவரது மனைவி, காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இதையடுத்து போலீஸர் சந்திரகிர் லோதியைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.