1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (13:34 IST)

ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி: பள்ளி மாணவிகளின் தலையை துண்டிக்க உத்தரவு!!

சவுதி அரேபியாவில் ஆண் நணபர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


 
 
பாத்திமா அல் குவைனி என்ற பெண்ணின் பிறந்த நாளை அவரது தோழிகள் மூன்று ஆண் நண்பா்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனா். 
 
இது குறித்து பாத்திமாவின் பக்கத்து வீட்டுக்காரர் சவுதி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலா்கள் உடனடியாக அனைவரையும் கைது செய்து  விசாரணைக்கு அழைத்து சென்றனா்.
 
சுமார் ஒரு வருடத்திற்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆண் நண்பர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளது. 
 
ஆனால், பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐநா சபையும் பெண்கள் ஆணைக்குழுவும் குரல் கொடுத்துள்ளது.