வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (15:45 IST)

முதலைகளிடம் சிக்கிய 2 வயது குழந்தை: கம்போடியாவில் நடந்த பதறவைத்த சம்பவம்

கம்போடியாவில் முதலைகளுக்கு நடுவே சிக்கிய 2 வயது குழந்தையின் மண்டை ஓடு மட்டுமே மிஞ்சிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

கம்போடியாவில் சியம் ரியாப் என்ற இடத்தில் முதலை பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையை 35 வயதான மின் மின் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மின் மின் பண்ணை வேலையாக வெளியே சென்றுள்ளார். அவரின் மனைவி புதிதாக பிறந்த குழந்தையை ,வீட்டில் கவனித்து கொண்டிருந்தார். இவர்களது மூத்த மகள், 2 வயதுடைய ரோம் ராத், தனியே விளையாடிக் கொண்டிருந்தார்.

வெளியே சென்றுவிட்டு மின் மின் திரும்பிவந்து பார்த்த போது, தனது மகள் ரோம் ராத் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போனார். பின்னர் முதலைப் பண்ணையில் பார்த்தபோது காத்திருந்தது அதிர்ச்சி.

முதலை பண்ணையில் அவரது 2 வயது மகளின் மண்டை ஓடு மட்டுமே இருந்தது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் இடையில், தவறி விழுந்த ரோம் ராத்தை, முதலைகள் கடித்து குதறி தின்றுள்ளன.

தனது குழந்தையின் மண்டை ஓட்டை கண்ட ரோம் ராத்தின் தாய் அதிர்ந்து போய் உட்கார்ந்து கதறி அழுதார். 2 வயது குழந்தையை முதலை கடித்து தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.