இங்கிலாந்து இளவரசருக்கு ’’கோவிட் 19 ’’பாசிட்டிவ் : மக்கள் சோகம் !
இங்கிலாந்து இளவரசருக்கு ’’கோவிட் 19 ’’பாசிட்டிவ் : மக்கள் சோகம் !
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 4,22,759 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 18,902 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் என்ற கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா பாதிக்கபட்டவர்களில் 9,102 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய அளவில் சுமார் 3 லட்சம் பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உலகையே கட்டியாண்ட இங்கிலாந்து சூரியன் மறையாத ராஜாங்கம் என்ற பெருமை கொண்டவர்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் அந்த எண்ணத்தை எல்லாம் சோவியத் யூனியன் நாடுகளும், அமெரிக்க அரசு மற்ற யூரோப்பிய அரசுகளும் அடித்து நொறுக்கு வல்லரசு நாடுகள் ஆகின.
இந்த நிலையில் சமீபத்திய காலம் வரை பிரெக்ஸெட் பிரச்சனை பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கியிருந்த அந்நாட்டுக்கு தற்போது பெரும் அதிர்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
ஆம் அந்நாட்டில் இளவரசர் சார்லஸுக்கு தற்போது கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.