1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (11:25 IST)

ஆபாச நடிகை வழக்கு: டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு.. தேர்தலில் போட்டியிட முடியுமா?

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பில் 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் டொனால்ட் டிரம்புக்கான தண்டனை விபரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
தன்னுடன் உறவு வைத்தது குறித்து பொதுவெளியில் பேசாமல் இருக்க வேண்டும் என ஆபாசமான நடிகை ஸ்டார்மி டானியல்ஸ் என்பவருக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது . 
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் அறிவித்துள்ளது. 
 
இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தயாராக இருந்த நிலையில் இந்த தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தண்டனை விவரத்தை பொறுத்து அவர் இந்த தேர்தலில் நிற்க முடியுமா அல்லது தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகி விடுவாரா என்பது குறித்து தெரியவரும் என்றும் அமெரிக்க சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்
 
Edited by Mahendran