சீனாவின் சித்து வேலையா கொரோனா? வந்தது ஒரு முடிவு!!
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என ஆராய்ச்சிகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் உருவெடுத்த கொரோனா வைரஸ், இப்போது அந்நாட்டில் கட்டுகுள் வந்தாலும் உலக நாடுகள் பலவற்றில் தொற்று பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. கொரோனா அதிக அளவில் பரவத்துவங்கிய போது இது சீனாவின் பயோ வெப்பன் என செய்திகள் வெளியிடப்பட்டது.
ஆம், வூகான் நகரில் கிடுமி யுத்தம் நடத்தப்படுவதற்கான ஓர் ஆய்வகம் உள்ளதாகவும், அங்கிருந்து வெளியே பரவியது தான் இந்த கொரோனா என கூறப்பட்டது. ஆனால் இப்போது இது செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையிலான ஆய்வு குழு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி கொரோனா வைரஸ் சீனாவோ அல்லது வேற எந்த உலக நாடுகளும் உருவாக்கிய செயற்கையான வைரஸ் அல்ல, இது இயற்கையாக உறுவானது என உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த கொரோனா வைரஸின் மரபணு கட்டமைப்பை கண்டுபிடித்த சீனா இதை பொதுவில் வெளியிட்டது. இந்த கட்டமைப்பை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கொரோனா வைரஸின் தன்மையானது இதற்கு முன்பு மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸின் கட்டமை கொண்டது அல்ல எனவும், இது வவ்வால்களுக்க உடல்நலக்குறைவை ஏற்படுத்திய வைரஸ்கள் போல உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.