புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (05:40 IST)

ஒரே ஒரு காபியால் ஒரு கொலை, 20 ஆண்டு சிறை:

அமெரிக்காவில் தவறுதலாக காபியை மேலே சிந்திய விவகாரத்தால் ஒரு கொலையும், கொலை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் கிடைத்துள்ளது.



 
 
அமெரிக்காவில் 52 வயது நபர் அண்டான்யோ முரல்ஸ் என்பவர் ஒரு ஓட்டலில் காபி பார்சல் வாங்கி கொண்டு நடந்து வந்துள்ளார். அப்போது எதிரே தனது நண்பர்களுடன் வந்த ஹால் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் காபி, அந்த நபர் மிது கொட்டிவிட்டது. 
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஹால், அண்டான்யோவை கடுமையாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்து பின்னர் சிகிச்சையின் பலனின்றி இறந்தார். இதனால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹாலுக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சகிப்புத்தன்மை மற்றும் புத்தியில்லாத ஹாலுக்கு இந்த தண்டனை சரியானதுதான் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.