வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது: ப சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வலியுறுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார் பட்டியலை வெளியிட முடியாது என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்தலில் வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட வேண்டும் என சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம், மணிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்
ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் வாக்களிப்பவர் பட்டியல் வெளியிடும் நடைமுறையை காங்கிரஸ் கட்சியில் இல்லை என்றும் எனவே பட்டியலை வெளியிட முடியாது என்றும் இது அனைத்து மக்களும் பார்க்கும்படி வெளிப்படையாக வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்