துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 15 வயது பள்ளி மாணவி.. 3 பேர் பரிதாப பலி..!
அமெரிக்காவில் பள்ளி மாணவி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கி நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், சம்பவ இடத்தை கேள்விப்பட்டு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 390 மாணவர்கள் படித்து வரும் நிலையில், துப்பாக்கி சூட்டில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva