1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:57 IST)

சிக்கி கிடக்கும் சீன ராணுவம்; எச்சரித்த பத்திரிகை

கிங் ஆஃப் க்ளோரி என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு சீன ராணுவத்தில் பணிபுரியும் இளம் ராணுவ வீரர்கள் அடிமையாகி கிடப்பதாக ராணுவ பத்திரிகை எச்சரித்துள்ளது.


 

 
உலக அளவில் பிரபலமான கிங் ஆஃப் க்ளோரி என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு சீனாவில் அடிமையானவர்கள் அதிகம். இந்த விளையாட்டு சீனக் குழந்தைகளின் உறக்கத்தை கெடுத்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனால் குழந்தைகளின் நலன் கருதி இந்த விளையாட்டை உருவாக்கிய டென்சென்ட் நிறுவனம் தினசரி விளையாடும் நேரத்தை குறைத்தது.
 
போர் முறையை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டு ராணுவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு சீன ராணுவத்தில் பணிபுரியும் இளம் ராணுவ வீரர்கள் அடிமையாகி கிடப்பதாக ராணுவ பத்திரிகை எச்சரித்துள்ளது.
 
மேலும் ஆன்லைன் விளையாட்டு ராணுவ வீரர்களின் போர் திறனைக் கடுமையாக பாதிக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.