வளர்த்தவர் சமாதியில் வாழும் பாசக்கார பூனை
இந்தோனேஷியாவில் வளர்த்தவர் இறந்து போனதால் பாசக்கார பூனை ஒன்று அவரது சமாதியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தோனேஷியாவில் மத்திய ஜாவா பகுதியில் இபு குந்தாரி என்ற பெண் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அவர் இறந்த பிறகு அந்த பூனை அவரது சமாதியிலே வாழ்ந்து வருகிறது.
பொதுவாக வீட்டில் வளர்க்கும் ஜிவன்களின் நாய்க்கு அடுத்து பூனை தான் இருக்கும். அப்படி நாய்களை போல பூனையும் பாசத்துடனும், நன்றியுடனும் இருக்கும். அதுபோல வளர்த்தவர் இறந்து போனதால் அவரது சமாதியிலே வாழ்ந்து வருகிறது.
அவ்வப்போது உணவுக்காக மட்டும் குந்தரி வீட்டுக்கு செல்கிறது. அங்கு குந்தரியின் குழந்தைகள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் குந்தரியின் சமாதிக்கே சென்று விடுகிறது.
இந்த பூனை சமாதி அருகில் இருப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்கு எடுத்து சென்றார். ஆனால் அந்த பூனை அவரது வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் குந்தாரியின் சமாதிக்கு வந்து விட்டது. இதுபோன்று பலமுறை நடந்தது.
அதன்பின்னர் பூனையின் நடவடிக்கையை கண்காணித்த இளைஞருக்கு அதன் பின்னணி தெரியவந்தது.