வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (15:43 IST)

பேஸ்புக்கிற்கு 4.7 கோடி அபராதம் விதித்த இங்கிலாந்து நீதிமன்றம்

வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடியது சம்மந்தமான வழக்கில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ4.7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தில் 200 கோடிக்கும் அதிகமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். உலகின் முதன்மை சமூக வலைதளமான பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களிடம் பல தனிநபர் விவரங்களைப் பெற்று வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா எனும் அரசியல் ஆலோசனை அமைப்பு பேஸ்புக்கில் உள்ள 5 கோடி பேரின் தகவல்களைத் திருடி அந்த தகவல்களை இங்கிலாந்தின் மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்த குற்ற்ச்சாட்டு பரவலானக் கவனத்தைப் பெற்றதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் நடத்தப்பட்ட விசாரனையில் அவர் அந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கோரினார். இதனால் உலகம் முழுவதும் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வழக்கின் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து அரசு விசாரித்து வந்தது. தற்போது அந்த கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு 4.7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.