வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (12:22 IST)

157 ஆண்டு கால பழமை; பிக் பென் கடிகாரம் இயங்காது!!

உலகப்புகழ் பெற்ற பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021 ஆம் ஆண்டு வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிக் பென் கடிகாரம் 1859 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது 157 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. 
 
பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் பராமரிப்பு பணிகளுக்காக கடிகாரத்தின் இயக்கம் நிறுத்தப்படுகிறது.
 
வரும் 2021 ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பென் கடிகாரத்திற்கு மட்டும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுபோன்று முன்னர் 1983, 1985, 2007 ஆண்டுகளில் பிக் பென் பராமரிப்பு பணிகளுக்காக செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.